இன்றைய காலகட்டத்தில் ICT இன் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு 2011ஆம் ஆண்டு முதல் உயர்தர வகுப்புகளிற்கான முதன்மைப் பாடங்களில் ஒன்றாக இப்பாடம் அறிமுகம் செய்யப்பட்டது. ICT பாடமானது எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை இலகுவில் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தைத் தரும் பாடமாக மட்டுமன்றி Z-Score அடிப்படையில் இலகுவாக பல்கலைக்கழக உள்நுளைவினைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு பயனுள்ள பாடமாகவும் அமைகின்றது.
A/L ICT இனைப் பொருத்தவரையில் இது ஒரு இலகுவான பாடமாகக் காணப்படுகின்ற வேளையிலும், போதியளவு கற்றல் வளங்கள் இன்மையும் , விளக்கங்கள் இல்லாமல் காணப்படுதலும் ICT மாணவர்களது கல்வியிலும் , ICT இனைத் தெரிவு செய்யும் மாணவர் எண்ணிக்கையிலும் தாக்கம் செலுத்துவதாக அமைகின்றது. மேலும், ICTயானது காலப்போக்கில் அத்தியாவசியக் கற்றலாகவே மாறிவிடும் தேவை அதிகரித்துவரும் பாடமாகக் காணப்படும் நிலையிலும்கூட, துணிந்து இப்பாடத்தினைத் தெரிவு செய்யும் தமிழ் மாணவர்களது தொகை
ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. காரணம், இப்பாடத்தில் சிறந்த சித்திக்களைப் பெறமுடியாமல் போய்விடுமோ என்ற பயமும், பாடக்குறிப்புக்கள், பாட விளக்கங்களின் கிடைப்பனவு அனைத்து பகுதிகளிலும் கிடைக்காமையே ஆகும். அதுமட்டும் இன்றி, இணையத்தில் கூட எமது பாடத்திட்டத்திற்கு உரிய பாடக்குறிப்புக்கள் தமிழில் கிடைக்கும் சந்தர்ப்பம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் சரளமான ஆங்கில அறிவு குறைந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் இப்பாடம் தொடர்பான ஆர்வமும் குறைந்துகொண்டே செல்வதையும் சில பிரதேசங்களில் காணக்கூடியதாய் உள்ளது.

மேலும், சில பாடசாலைகளில் ICT பாடத்திற்கான ஆசிரியர்கள் நியமிக்கப் படாமலும், ICTயானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடமெனும் ரீதியில் ஆசிரியர்களிடமும் போதியளவு வளம் இல்லை எனும் நிலையும்கூட ஆங்காங்கே காணப்படுகின்றது. இவற்றால் எம் கற்றல் சமூகம் முகம்கொடுக்க நேரிடுகின்ற அசௌகரியங்கள் இன்னுமின்னும் அதிகரிக்கக் கூடாது என்ற அடிப்படையில் இவ் இணையத்தளம் வடிவமைக்கப்படுகின்றது.
கற்றலே ஒரு சமூகத்தை உயர்த்தும் அடிக்கல்லாக விளங்கும் நிலையில் ICT பாடம் தொடர்பில் எம் தமிழ் கற்றல்சமூகத்தின் நிலைமையினைக் கருத்திற்கொண்டு, ICT மாணவர்களுக்காகவென உருவாக்கப்படும் ஒரு இணையத்தளமே இதுவாகும். இயன்றளவு வழிகாட்டல்கள், வளங்கள் மற்றும் விளக்கங்களையும் இங்கே தருவதுடன் தமிழில் ICT கற்பதற்கு ஒரு உசாத்துணையாகவும் விளங்குகின்ற, இலாப நோக்கமோ அல்லது சுயனலன்களோ கருதாத கற்றல் சார் இணையப்பக்கமாக இது விளங்கும் என்பது நிச்சயம்.
"உலகிலேயே மிகப்பெரிய ஆயுதம் பேனை"