Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பாடத்திட்டம்

உயர்தரத்தைப் பொருத்தவரையில் , www.nie.lk இலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய தரம் 12 மற்றும் 13ஆம் ஆண்டு ஆசிரியர் கையேட்டினை முழுமையாக விளங்கிக் கற்பதன் மூலமாகவே ICT பாடத்தில் குறைந்தது C சித்தியையாவது பெற்றுவிட முடியும். இதற்கு மேலாக பாடத்திட்டத்தினை (2013 இல் புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம்) பதிவிறக்கம் செய்து , அதனை அடிப்படையாகக் கொண்டு கற்பது மிகச்சிறந்த கற்றல் முறையாகும். இவ்வாறு கற்பதன் மூலம் நிறைவு செய்துள்ள பாடப்பகுதிகளையும் தவறவிடப்பட்ட பாடப்பகுதிகளையும் அறிந்து சரியான முறையில் மதிப்பிடல்களை மேற்கொண்டு மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெறமுடியும்.


12ஆம் ஆண்டு ஆசிரியர் கையேடு -Download here
13ஆம் ஆண்டு ஆசிரியர் கையேடு -Download here
புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் (2013) -Download here


NIE இணையத்தளமானது தற்போது உயர்தர தொழிநுட்பம் மற்றும் ICT பாடங்கள் தொடர்பில் அதிகளவு அக்கறை செலுத்தி வருவதன் அடிப்படையில் http://alictnie.blogspot.com எனும் இணையப்பக்கமொன்றை பதிப்பு செய்திருகின்றது. இப்பக்கத்தில் சிங்கள பதிப்புக்களே அதிகமாகக் காணப்படினும் TAMIL BOOKLET எனும் பெயரில் சிறந்த குறிப்புக்களையும் விளக்கங்களையும் கொண்ட Sribd presentation ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பதிவிறக்கம் செய்யக்கூடிய வசதிகளைக் கொண்டிராவிடினும், கற்றலை இலகுபடுத்தும் விதமாக எமது இணையத்தளத்தில் Tamil Booklet presentation ஆனது பதிவிறக்கக்கூடிய வசதியுடன் கூடிய  PDF கோப்பாக்கப்பட்டிருகின்றது. 
TAMIL BOOKLET: Downloadable Version  
மேலும், ICT தொடர்பில் போதிய அடிப்படைகள் காணப்படவில்லையாயின் , தரம் 10 மற்றும் 11ஆம் ஆண்டுகளின் சாதாரண தர பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தரம் 11-Download here
தரம் 10 (புதிய பாடத்திட்டம்)-Download here
தரம் 10 (பழைய பாடத்திட்டம்)-Download here

தமிழ் மொழிமூலத்தில் உயர்தர ICT இற்கான நூல்கள் வெளியிடப்படுவது மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. எனினும் திருமதி.ரூபினி D.ஜெயராஜா ஆசிரியர் அவர்களது நூல்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும் என்பதுடன், அவர்களது சாதாரண தர மற்றும் GIT வழிகாட்டிகள் உயர்தர ICT இற்கு மிகவும் சிறப்பான அடிப்படையைத் தரக்கூடிய நூல்களாக விளங்குகின்றன.

நூல்களைப் பார்வையிட -Click here

ICT தொடர்பில் ஏனைய புதிய பதிப்புக்கள் யாவும் எமது இணையத்தளத்தில் மிக விரைவாக இற்றைப்படுத்தப்பட்டு அவை தொடர்பில் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.