கலைப்பிரிவு (Arts Stream)
A. சமூக விஞ்ஞானங்கள் / பிரயோக சமூகக் கற்கைகள்
- பொருளியல்
- புவியியல்
- வரலாறு (இலங்கை வரலாற்றுடன் இந்திய / ஐரோப்பிய வரலாறு)
- மனைப்பொருளியல்
- கணக்கீடு / வணிகப் புள்ளிவிபரவியல்
- விவசாய விஞ்ஞானம்/கணிதம்/இணைந்த கணிதம்
- அரசியல் விஞ்ஞான மூலகங்கள்
- அளவையியலும் விஞ்ஞான முறையும்
- தொடர்பாடல் ஊடகக் கற்கையும்
- தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்
- தொழிநுட்பப் பாடங்களில் ஏதேனும் ஒன்று
- குடிசார் தொழிநுட்பம்
- பொறிமுறைத் தொழிநுட்பம்
- மின் இலத்திரனியல் தகவல் தொழிநுட்பம்
- விவசாய தொழிநுட்பம்
- உணவுத் தொழிநுட்பம்
- உயிர்வள தொழிநுட்பம்
B.சமயங்களும் நாகரீகங்களும்
- இந்து சமயம்/ இந்து சமய நாகரீகம்
- இஸ்லாம்/இஸ்லாம் சமய நாகரீகம்
- கிறிஸ்தவம்/கிறிஸ்தவ சமய நாகரீகம்
- பௌத்தம்/பௌத்த நாகரீகம்
- கிரேக்க உரோம நாகரிகம்
C.அழகியற் கற்கைகள்
- சித்திரம்
- நடனம்
- பரதம்
- சிங்களம்
- சங்கீதம்
- கர்நாடக
- கீழேத்தேய
- மேலேத்தேய
- நாடகமும் அரங்கமும்
- தமிழ்
- ஆங்கிலம்
- சிங்களம்
D. மொழிகள்
- தேசிய மொழிகள்
- தமிழ்
- ஆங்கிலம்
- சிங்களம்
- சாஸ்திரிய மொழிகள்
- அரபு
- சமஸ்கிருதம்
- கிரேக்கம்
- இலத்தீன்
- பாளி
- வெளிநாட்டு மொழிகள்
- பிரெஞ்சு
- ஜப்பானியம்
- ஹிந்தி
- ஜெர்மன்
- சீனம்
- மலாய்
- பார்சீய மொழி
- ரஷ்ய மொழி
- உருது
- மேற்குறித்த பாடத் தொகுதி A தொடர்பில் 3 பாடங்களையுமோ அல்லது ஏதேனும் 2 பாடங்களையோ 1 பாடத்தினை மாத்திரமோ மாணவர்கள் தெரிவு செய்து கொள்ள முடியும். ஆனால் குறைந்த பட்சம் ஒரு பாடத்தையேனும் இத்தொகுதியிலிருந்து தெரிவு செய்தல் கட்டாயமாகும்.(மொழிப்பாடங்களில் 2 இனைத் தெரிவு செய்யும் மாணவர்களுக்கு இது கட்டாயமில்லை.)
- பாடத்தொகுதி B இனில் ஏதேனும் ஒரு சமயத்தைத் தெரிவு செய்யும் மாணவர்கள் அச்சமயத்துடன் தொடர்புபட்ட நாகரீகத்தைத் தெரிவு செய்ய முடியாது.
- பாடத்தொகுதி C இல் காணப்படும் 1 அல்லது 2 பாடங்களை மாணவர்கள் தெரிவு செய்ய முடியும். அவ்வாறு தெரிவு செய்யும் போது குறித்த அழகியல் பாடத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டும். மாணவர் ஒருவர் இரு அழகியல் பாடங்களைத் தெரிவு செய்வாராயின், அவற்றுள் ஏதேனும் ஒரு பாடம் தொடர்பில் திறமைச் சித்தி காணப்படுதலே போதுமானது.
- பாடத்தொகுதி D இல் காணப்படும் பாடங்களில் , மாணவர் விரும்பும் ஏதேனும் 1 அல்லது 2 அல்லது 3 மொழிப்பாடங்களைத் தெரிவு செய்துகொள்ள முடியும். எனினும் 3 பாடங்களுமே மொழிப்பாடமாக காணப்படின் பின்வரும் நிபந்தனைகளுக்கு இணங்க அமைவது அவசியமாகும்.
- மூன்று பாடங்களும் தேசிய மொழிகளுக்குள் உள்ளடங்கும் பாடங்களாகக் காணப்படல் வேண்டும்.
(OR)
- மூன்று பாடங்களும் தேசிய மற்றும் சாஸ்திரிய மொழிகளுக்குள் உள்ளடங்குவனவாகக் காணப்படல் வேண்டும்.