Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
வர்த்தகத் துறை 

இப்பாடத்துறையைத் தெரிவு செய்யும் மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரத்தில் கணக்கீடும் வணிகக்கல்வியும் / முயற்சியாண்மை கற்கை / வரலாறு ஆகிய பாடங்களுல் ஒன்றிலேனும் திறமைச்சித்தி(C) அல்லது அதனை விட உயர் சித்தியைப் பெற்றிருக்க வேண்டும்.

இப்பாடத் துறையில் கற்க விரும்பும் மாணவர்கள் பின்வரும் பாடங்களில் குறைந்தது ஏதேனும் இரண்டு பாடங்களையாவது கட்டாயமாகத் தெரிவு செய்ய வேண்டும். (3 பாடங்களையுமே பின்வருவனவற்றிலிருந்து தெரிவு செய்யவும் முடியும்.)


  1. கணக்கீடு
  2. வணிகக்கல்வி
  3. பொருளியல்


மேற்குறித்த 3 பாடங்களில் 2 பாடங்களை மாத்திரம் தெரிவு செய்வதாயின், மூன்றாம் பாடமாக பின்வரும் படங்களில் ஒன்றினைத் தெரிவு செய்தல் வேண்டும்.
  • வணிகப் புள்ளிவிபரவியல்
  • புவியியல்
  • அரசியல் விஞ்ஞானம்
  • வரலாறு (இலங்கை வரலாற்றுடன் இந்திய / ஐரோப்பிய வரலாறு)
  • அளவையியலும் விஞ்ஞான முறையும்
  • ஆங்கிலம்
  • ஜெர்மன்
  • பிரெஞ்சு
  • விவசாய விஞ்ஞானம்
  • இணைந்த கணிதம்
  • தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்