உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Bio-Science)
இப்பாடத் துறையில் கற்க விரும்பும் மாணவர்கள் க.பொ.த. சாதாரண தர விஞ்ஞானப் பாடத்தில் திறமைச்சித்தியினைப் பெற்றிருக்க வேண்டும்.
இது தொடர்பான பாடச் சேர்மானங்கள்:
பின்வரும் பாடங்களில் ஏதேனும் 3 பாடங்களைத் தெரிவு செய்ய முடியும்.
- உயிரியல்
- இரசாயனவியல்
- பௌதிகவியல்
- விவசாய விஞ்ஞானம்
- கணிதம்
பௌதிக விஞ்ஞானப் பிரிவு / பொறியியற் துறை (Physical Science/Maths)
இப்பாடத் துறையில் கற்க விரும்பும் மாணவர்கள் க.பொ.த. சாதாரண தர கணிதப் பாடத்தில் திறமைச்சித்தியினைப் பெற்றிருக்க வேண்டும்.
இது தொடர்பான பாடச் சேர்மானங்கள்:
பின்வரும் பாடங்களில் ஏதேனும் 3 பாடங்களைத் தெரிவு செய்ய முடியும்.
- இணைந்த கணிதம்
- இரசாயனவியல்
- பௌதிகவியல்
- உயர் கணிதம்